கனவான காதல்

கனவென வந்தாய் மனம் நனைய,
நினைவென நின்றாய் கன்ணம் நனைய
உறவென சொன்னாய் உயிர் மகிழ
பிரிவென செய்தாய் உளம் நெகிழ

உன் புன்னகையை சேமித்துக் கொண்டேனடி
உன் நிழலையும் காதலிக்க செய்தேனடி
கண்ணிலே வளர்ந்த காதலோ அன்று
எண்ணத்தை மாற்றி போனதேன் இன்று

சிரிப்பின் முகமூடி நாளுக்குள் அணிந்தபடி
பிரிவின் அழுகையை நான் சுமந்தபடி
உன் நினைவோ என்னைக் கொல்ல
கண்ணீரின் தத்துப்பிள்ளையானதை யாரிடம் சொல்ல

தோல்வி என்பது எனக்கு பழகியதே
வாழ்வோடு கூடாது காதலும் விலகியதே
நிஜமென நினைத்தது நிழலென ஆனது
மயக்கம் தீர்ந்தது காதலும் வீணது

ஜெயம்
09-02-2026

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading