புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

கமல் ஜெயபாலன்

கலவரம்

அன்று ஒருநாள் அவலம் நடந்தது
இன்றும் இருக்கிறது இதயத்தில் அதுவும்
கொன்று குவித்தனர் கொழுத்தி எரித்தனர்
ஒன்றும் இல்லாமல் ஓடி வந்தனர்

சொத்து உள்ளவன் சுகத்துடன் இருந்தான்
செத்து மடிந்தவன் சினத்துடன் இருந்தான்
எத்திக்கும் இல்லாமல் எத்தனை பேர்
அத்தனை பேரும் அகதிகள் ஆயினர்

அரசன் அன்று அறுப்பான் எனபதும்
இறைவன் நின்று அறுப்பான் என்பதும்
இன்று காண்கின்றோம எமது நாட்டில்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading