கீத்தா பரமானந்தன்

ஆறுமோ ஆவல்!
அசைபோடும். மனத்தில்
அலையாக ஆசைகள்/
விசையாக உந்துகின்ற
விதவித ஏக்கங்கள்!
கடைவிரித்து நிற்கின்ற
கணக்கற்ற எதிர்பார்புகள்!
முடையாகச் சுமக்கின்றோம்
முத்திரைகள் பதித்திடவே!

விடையறியா வினாவாய்
விரைகின்ற கணங்கள்
இடையினிலே ஆயிரமாய்
எழுந்திடும் எதிபார்ப்பு
தடையாகிப் போகாமல்
தக்கவைக்கப் போராட்டம்
மடையாகும் ஆவலொன்று
மனந்தனில் எப்போதும்!

எங்களது இல்லத்தில்
இளமையிலே வாழ்ந்ததுபோல்
சோதரர்கள் எல்லோரும்
சேர்ந்திருக்கும் காலமது
மீண்டொருநாள் வந்திடணும்
மான்களாகத் துள்ளிடணும்
ஆறுமோ ஆவல்?

கீத்தா பரமானந்தன்
05-06-23

ஆறுமோ ஆவல்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading