கணப்பொழுதில்
கணப்பொழுதில்
கீத்தா பரமானந்தன்
விடியல்!
சிட்டுக்கள் பாடும்
சீதளம் வீசும்
மொட்டுக்கள் விரிந்தே
முகவுரை எழுதும்!
பட்டொளிக் கதிரும்
பரவியே சிரிக்கப்
பாரினை விடியல்
பதமுடன் அணைக்கும்!
எட்டியே ஓடும்
இடரெனும் இருளும்
இலக்கினை நாடி
இருவிழி கூடும்!
சுட்டிடும் பாதைச்
சுடரொளி ஆகி
சுடர்விடும் எங்கும்
சுதந்திர விடியல்!
விதியெனும் வரைபை
வீழ்த்திடும் ஞானக்
கதிரதன் மலர்வாய்க்
ககனத்தில் விடியல்!
மதியதன் துணையில்
மடமைகள் அழிக்கும்
மந்திர ஒளியே
மனிதத்தின் விடியல்!
கீத்தா பரமானந்தன்21-03-23
விடியல்!
சிட்டுக்கள் பாடும்
சீதளம் வீசும்
மொட்டுக்கள் விரிந்தே
முகவுரை எழுதும்!
பட்டொளிக் கதிரும்
பரவியே சிரிக்கப்
பாரினை விடியல்
பதமுடன் அணைக்கும்!
எட்டியே ஓடும்
இடரெனும் இருளும்
இலக்கினை நாடி
இருவிழி கூடும்!
சுட்டிடும் பாதைச்
சுடரொளி ஆகி
சுடர்விடும் எங்கும்
சுதந்திர விடியல்!
விதியெனும் வரைபை
வீழ்த்திடும் ஞானக்
கதிரதன் மலர்வாய்க்
ககனத்தில் விடியல்!
மதியதன் துணையில்
மடமைகள் அழிக்கும்
மந்திர ஒளியே
மனிதத்தின் விடியல்!
கீத்தா பரமானந்தன்21-03-23
