கெங்கா ஸ்ரான்லி

விடுமுறை
————
சூரியனுக்கு விடுமுறையே இல்லை
அவன் விடுமுறை கடுத்தால்
உலகமே இருண்டு விடும்
சந்திரனுக்கு உண்டு விடுமுறை
அமாவாசை அன்று விடுமுறை
இறைவன் படைப்பில் இதுவும்
ஒரு விதம் ஓரவஞ்சகம்
மனித உடலுக்கும் ஒருநாள்
விடுமுறை ஆத்மா உடலை
விட்டகலும்போது
ஆத்மாக்கு விடுமுறை. இல்லை
அது அண்டத்தில் இருப்பதால்
பெண்ணுக்கு விடுமுறை என்பர்
ஆனாலும் அவள் மூப்பெய்தியபின்
நிரந்தர விடுமுறை தானே
விடுமுறை எப்போதெனக் காத்திருக்கும் பிள்ளைகள்
சுற்றுலா செல்ல எத்தனிக்கும்
மனைவி கையில் பணமின்றி
பரிதவிக்கும் கணவன்
இங்கே வெடிக்கும் பூகம்பம்
நற்பெண்டாட்டி என்றால்
சரி விடுங்கள் அடுத்த முறை
விடுமுறைக்கு போகலாமே என
இங்கு நிறையும் புரிதலால்
புத்துணர்வு குடும்பத்தில்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
29.7.24

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading