தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு
“ பெற்றோரே”

நடமாடும் தெய்வங்கள் நானிலத்தில் பெற்றோரே!
உடனிருந்து உரிமைதந்து ஊசலாடும் தெய்வங்களே!
கடமையென எண்ணாது கருணையுடன் அணைப்பவரே!
மடமைதனை அகற்றி மகிமைதனைப் புகட்டுபவரே!

எங்களின் பெற்றோரே ஏணியாக நிற்பவர்
தங்களது சுமையை தூசாக நினைப்பவர்
பங்கம் நேராது பவுத்திரம் காப்பவர்
சங்கத் தமிழின் சரித்திரம் சொல்பவர்

வாழ்வில் வசந்தம் வீசிடச் செய்பவர்
ஏழ்மையை விரட்டி ஏந்திக் காப்பவர்
கண்ணில் தெரியும் கடவுளர் பெற்றோரே!
கண்குளிரக் காலமெல்லாம் காக்கவேண்டும் பெற்றோரை…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan