சக்தி சக்திதாசன்

எண்ணத்தில் ஓசைகள்
வண்ணத்தில் கலவைகள்
சொற்களுள் புதையல்கள்
சொல்லாத புரிதல்கள்

விடியலின் இரகிசியம்
இரவுக்குத் தெரியாது
முடிவதின் அர்த்தங்கள்
முதலுக்குத் தெரியாது

கருமைக்குள் வெண்மை
கண்டவர் உண்டாமோ ?
துன்பத்தில் இன்பம்
தூய்த்தவர் உண்டாமோ ?

வானத்தில் ஆதவன்
வருவதைத் தடுத்திடலாமோ ?
வாழ்வினில் இன்பதுன்பங்கள்
வருவதை நிறுத்திடலாமோ ?

கிடைத்ததைக் கொண்டு
வாழ்க்கையை ரசிப்போம்
திருப்தியின் மகிழ்ச்சியை
உள்ளத்தில் விதைப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading