பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

சரளா விமலராசா

வணக்கம் உறவுகளே

வெற்றிப்பயணம்

எண்ணம் என்றும் தெளிவாக
ஏறு படியாய் எழுகின்றார்!
தண்ணீர் போன்றே குளிர்மனத்தால்
தாவிக் குதித்தே ஓடுகின்றார்!
உண்மை ஒன்றே மூச்சாக
உலகைக் கைக்குள் பிடிக்கின்றார்!
திண்மை கொண்ட நெஞ்சத்தால்
திருப்பும் மூனையைத் தீட்டுகின்றார்!

கட்டி வைத்த ஆசைகளை
கனவு கண்டு கழிக்கின்றார்!
பெட்டிப் பாம்பாய் அடங்காமல்
பேரும் புகழும் அடைகின்றார்
நட்டு வைத்த செடிபோல
நன்றாய் வளர்ந்து விளைகின்றார்!
பட்டுப் பூச்சாய் மின்னிடவே
பறக்கும் இறகை விரிக்கின்றார்!

கல்லும் முள்ளும் பட்டாலும்
கவலை மறந்தே துணிந்திடுவார்!
சொல்லால் அம்பை விட்டாலும்
சுடரும் விழக்காய் ஒளிர்கின்றார்!
அல்லும் பகலும் அயராது
அனைத்துச் சிறப்பும் பெறுகின்றார்!
வல்ல வாழ்வின் வெற்றிகளை
வளமாய்ச் சூடி மகிழ்கின்றார்!

சரளா விமலராசா சுவிற்சர்லாந்து

Nada Mohan
Author: Nada Mohan