சர்வேஸ்வரி சிவரூபன்

பெண்ணே
பூங்கொடியே பொற்கொடியே புவிவிளங்க வந்த குலமகளே
கலைமகளே அலைமகளே மலைமகளே என்றும்
பாரதம் துலங்கிட வந்த மாதாவே
கற்பகதருவே மாசில்லா மணியே மலர்விழியும் நீதானே
முடிசூடிநின்று குடும்பத்தையாளும் பெண்ணவளும் நீதானே
வண்ணமாய் திண்ணமாய் வரமாய் வந்தவளே
கண்ணம்மா நீதானே எந்தன் செல்லம்மா என்றே போற்றியும் நிற்பாரே

நால்வகைக் குணமும் நான்மறையுணர்வும் கொண்டவள் பெண்ணே
கவிஞர்கள் வர்ணிக்கும் மாபெரும் தேவியம்மா
புன்னகையிருந்தாள் பொன்னகை தேவையில்லை என்பார்
சாதனை படைக்கும் சரித்திரமான சத்திய நெறியும் கொண்ட
வேதனை தீர்க்கும் வேதசொரூபியும் பெண்ணே
பெண்ணே பெண்ணே என்றும் பெருமைக்கு உரியவளே

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading