சாளரத்தின் ஒளியினிலே

ஜெசி மணிவண்ணன்

வெளிநாட்டுக்கு வந்ததாலே
சாளரம் முக்கியமாகிறார்
வெய்யிலோ மழையோ
காற்றோ பனியோ.
சாளரத்தால் பார்த்தே
மனம்மகிழ.
இருளான மனதை
சாளர ஒளிபட்டு உற்சாகமாகிறேன்.
எனக்காய் திறந்த சாளரத்தின் ஒளி
என்மீதும் விழுகிறது.
என் மனம் மகிழ
ஒளியில் முகம் மலர்கிறது.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan