கணப்பொழுதில்
கணப்பொழுதில்
சிவரஞ்சினி கலைச்செல்வன்
சந்தம் சிந்தும் சந்திப்பு216
நீர்க்குமிழி
நிற்கும் நீரோடு கொட்டும் நீர்சேர
உற்பத்தியாகும் நீர் குமிழி
சற்று நொடிக்குள்ளே சட்டென்று
உடையும்
கற்றுத்தரும் பாடம்
உடலும்
காற்றுப்போனால் வெறும்
சடலம்…
பித்து பிடித்து நித்தம் ஏதோ எதோ
சத்தென்று உண்டு கொழுக்க
சட்டையிலும் பட்டு உடுக்க
செத்த பிணமானால் கெட்ட மணம் வரும்
எட்டி போவார் உற்றம் சுற்றம்
இதை எண்ணாமல் அடிக்கிறார் கொட்டம்
புண்ணியம் பாவம் என்கிறார் உயிர் கொன்று வெந்து வேக வைத்து தின்ன
நன்று இது இந்த நாநில உயிர்களே
ஒன்றை ஒன்று கொன்று உண்ண
மன்றில் நின்றாடும் சிவன் படைப்பென்ன
ஒன்றும் புரியாது உண்மை தெரியாது
ஊனை உண்பார் பல கோடி
பாவம் மோடி
சீர் எது சிறப்பெது செய்வது எதை என்று
சிந்தித்து செயற்பட லாமோ
குற்றம் ஆமோ
நீரின் குமிழி போல் வாழ்க்கை இதில் ஏன் நின்று நிதானிக்க நேரம் நீ
சரியென எண்ணினால் செய்து வாழ் வாழும் நாள் சிறு வட்டம் என எண்ணி பாரும்.சிறப்பாய் அதை வெல்ல பாரும்
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-
