Jeya Nadesan May Thienam-222
மே தினமே மேதினியில் (712)
சிவரூபன் சர்வேஸ்வரி
அலை, ஓசை
அலை ,அலையாய் எழுகிறதே
ஆனந்தப் பரவசம் அடைகிறதே
கலை,கலையாய் விரிகின்றதே
கவிஞரின் கலைச்சங்கம் இசைக்கின்றதே
விளைந்த நற் பொன்மணிகள்
மலை,மலையாய் குவிகின்றதே
சுளை சுளையாய் சொற்பதங்கள்
சுகந்தவலை வீசுகின்றதே
கடலலையில் அலையோசை காதினிலே
சங்கோசைபோல் கூவி நின்றதுவே
மழைத்துளியின் ஓசை மானிலத்தில்
மலர்வுடனே அலையோசையில் எழுகின்றதே
தலை தலையாய் தமிழ் மணமும்
பரப்புவதும் தனியோசை
நிலை, நிலையாய் நிற்பதற்கு
பாமுகத்தில் பல ஓசை
சிலை வடிக்கும் ஆசாரி- அங்கே
கீறுவதும் அலையோசை
கடவுள் தந்த சொத்தென்று
கனிந்து நிற்பதேஅலையோசை
அலையோசை இல்லையென்றால்
வலையத்தளம் இங்கில்லை
அலாரம் ஒன்றை வைத்துவிட்டு
அயராமல் எழும்புவதும் தனியோசை
அலையோசை அகத்தினிலே
ஆடுதுபார் தினம்தினமே
ஆகாய வான்பரப்பில் அலை, அலையாக
முகில்களின் ஓட்டத்திலும் அலையோசை தானே,
கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி.
