கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 177
“பழமை”

பழமை தரும் அனுபவம், உன் வாழ்வு செப்பனிட உதவிடும்
புதுமையை நாடுவதோ மனதின் சபலம்
வெற்றி தோல்வியை என்றும் இடித்துரைக்கும் பழமையே
எண்ணித்துணிக கருமம், எண்ணுவதைப் பின்போடல் துயரம்

பழமை பொன்னானது ஆன்றோர் கூறி வைத்தார் என்றோ
பயிர் வளர்ந்த பின் வேலி போடச் சென்ற கமக்காரன் நிலை எங்கே?
பழமை அனுபவம் இருந்திருப்பின் விதைக்கு முன் வேலி அவசியம் புரிந்திருப்பான் அன்றே.
வாழ்வின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பழமை.

புரியாத பல விடயங்கள் சூழலில் இடம்பெறும்
அறியாமை அதை விதி என்னும்
பழமையோ அதை எதிர்கொள்ள வழி காட்டும்
சிந்திப்பாய் மானிடா!
சிறந்த முடிவுகள் தருவது எப்போதும் பழமையே.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan