சிவா சிவதர்சன்

வாரம் 184
“கோலுயர நாடுயரும்”

சோறுண்டு சுகமுண்டு நேற்றுவரை எம்நாட்டில் வளமான வாழ்வுண்டு
இல்லாத பொருளெல்லாம் இறக்குமதி,எமக்கென்ன குறையுண்டு?
கையிலே காசிருந்தால் கடையிலெல்லாம் வாங்கலாம்
திறந்த பொருளாதாரம் திட்டமில்லா அரசாங்கம்

உற்பத்தி கைவிட்டோம் உழுதுண்டு வாழ்தலில் ஊக்கமிழந்தோம்
பண்டமில்லா பண்டசாலைகள் விண்ணைமுட்டும் விலைவாசி
இயன்றளவு சுருட்டிய ஆட்சியாளர் தப்பியோடி தலைமறைவு.
எரிபொருளில்லை, உணவு மின்சாரம் போக்குவரத்து இருட்டடிப்பு

திறைசேரி காலி அந்நியச்செலாவணி அதலபாதாளம்
உருட்டும் புரட்டும் சிரட்டையும் கையும், நம்பி உதவ ஞாலத்தில் எவருமிலர்.
ஆட்சி மாறவில்லை அதிகாரம் மாறியது அலிபாபா கையில்
அரசியல் பிழைத்தால் அறமே கூற்றாகும்,வறுமையை விதைத்தால் பட்டினிச்சாவே அறுவடையாகும்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading