சிவா சிவதர்சன்

வாரம் 190

“மாட்சிமை தங்கிய மகாராணி”

ஆயிரம் இராணியர் அவனியில் ஆட்சி செய்ததுண்டு
அரசரோடு அணைந்து அரியாசனம் பெற்றதுண்டு
ஆனாலும் இரண்டாம் எலிசபத்திற்கு இணையான மகாராணி
எவருண்டு? அவர்போல் என்னொருவர் தோன்றுவது எளிதன்று.

ஆதவன் அஸ்தமிக்காத பிருத்தானிய சாம்ராச்சியம்
இருபத்தாறு ஆட்டையில் மணிமுடி சுமந்தது மக்கள் செய்த பெரும்பாக்கியம்
ஏழுபத்து ஆண்டுகள் செங்கோலாட்சியை போற்றி வளர்த்தவர்
பகைவரும் போற்றும் வண்ணம் ஆண்டு மறைந்தவர்

முப்பத்துநான்கு நாடுகள் அவர்கொடிகீழ் அடங்கி நின்றன
மகாராணி என்றால் இரண்டாம் எலிசபெத் என்றே நம்பி இருந்தன
மாட்சிமை தங்கிய மகாராணியும் பிருத்தானியப் பேரரசும்
வரலாறு சொல்லும் வழுவிலா பேருண்மை-மனிதகுலம்
உள்ளவரை அவர்தம் மாண்பு குன்றாது வாழ்ந்து வரும்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading