தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

“செல்லாக்காசு”

செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு

புவனத்தில் பலநாட்டின்
நாணய மதிப்பு
புழங்கிடும் பல்வேறு
நாமத்தின் சிறப்பு

பலநாட்டின் பணத்தால்
பாரிய விரிசல்
பதுக்கிய பணத்துக்கு
வந்ததே நெரிசல்

வங்கியில் மாற்றாமல்
வீதியில் கொட்டியும்
வரிசையாய் கட்டும்
செல்லாக்காசு ஆனதே

மானிடரின் பேச்சு
மதிப்பற்று போவதும்
செல்லாத காசுக்கும்
ஒப்புவமை ஆனதே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

Continue reading