ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-11

16-05-2023

பெற்றோரே

பெற்றோரே சிறந்த ஆசான்கள்
உற்று நோக்கியவர் பிள்ளையின்
பலத்தையும் பலவீனத்தையும்
தொற்றேதுமின்றித் தீர்த்து வைப்பர்.

பாசப் பூட்டுக்களைப் போட்டு வைப்பர் பல
நாட்டுக் கதைகளையும் சொல்லி வைப்பர்
நேசமாய்ச் சேர்ந்தது எம் சிறுவயதில்
சித்திரமாய்ப் பதிந்திரும் அடி மனதில்

தடம் மாறாமல் தடுத்திட வந்துதவும்
தங்கமாய் வாழ்ந்திட நின்றுதவும்
இத்தனையும் தந்த பெற்றோரை
மொத்தமாய் கைகளில் தாங்கிடுவோம்

பெற்றோர் காப்பகம் வேண்டாமிங்கு
பெரிய வைப்பகம் எம் இல்லம்
மொத்தமாய்த் தடங்கலும் வரலாமிங்கு
மோதியே பொக்கிஷம் காத்திடுவோம்.

நன்றி
ஜெபா ஸ்ரீதெய்வீகன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading