புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-30
02-04-2024

ஊக்கம் (சிறுமுயற்சி பாடல்)

நோக்கம் உனக்கு நிறைவேற
ஊக்கம் கொஞ்சம் வேண்டுமடா
ஏக்கம் கொண்டு உழைத்திட்டால்
எதிலும் வெற்றி உனக்கடா!

வேகமாய் நீ.. ஓடடா
வெற்றி நெருங்கி வருமடா
இலக்கை உயர்வாய் வைத்திடு
இதுவே வெற்றி தருமடா!

கணணியிலே விழிக்காதே
கண்ணுறங்கித் தூங்கிடு
இலட்சிய கனவில் நீயும் விழித்திடு
வாழ்க்கையும் அழகாகும்!

பிறக்கும்போது வெறும் கையுடன்
பிறந்து வந்து விட்டோம்
பெற்றதையிங்கு பகிர்ந்தளித்து
மகிழ்ச்சி நாமும் கொள்வோம்!

மகனே நீயும் புரிந்து கொள் -அம்மா
இங்கே கலங்குகின்றேன்
அனைவருக்கும் புகட்டிடு
இதுவே எந்தன் கனவடா…(நோக்கம்…)

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading