தங்கசாமி தவகுமார்

கவி : பூக்கட்டும் புன்னகை
03. 02. 2022

அந்தி வான அழகு
இயற்கையின் புன்னகை
ஆற்றங்கரை வருடல்
தென்றல் அதன் புன்னகை
மாலைப் பொழுதின் வானவில்
தூறலின் புன்னகை
தாயின் மடியின் தூக்கம்
தாய்மை மூச்சின் புன்னகை
அரிய நம் வரவு
அடுத்தவர் மனதில் பதிந்தால்
அது புன்னகை
அன்பை கொடுத்து
திறந்திடு மனதை
பூத்திடும் புன்னகை
வாழ்வினில் என்றும்!!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading