தீதும் நன்றும்

ராணி சம்பந்தர்

23.05.24
ஆக்கம் 317
தீதும் நன்றும்
திருப்தி என்பது தீராதது
அதிதிருப்தி என்றும்
மாறாதது
மனம் கொண்ட மாளிகை வாழாது
கனமோடு குமிறல் ஆனது

மனித நேயம் மறைய
இனத்துவேஷம் துரத்தி
பசி பட்டினி அறைய
பட்டம் படிப்பு எல்லாம்
தொலைந்தது

களவு வெட்டுக் குத்து
மரணம் பறை சாற்ற
உளவு தொட்ட விவசாயி
மன உளைச்சலிலானது

நன்மை,தீமை, நல்லது,
கெட்டது எது எனத் தெரியாது தீதும் நன்றும் என்று மனம்
போன போக்கில் தீயது
சிக்கி மனிதம் தொங்குகிறது.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

Continue reading