நகுலா சிவநாதன்

சுகந்தம் உண்டு

அனல் கக்கும் கோடையிலே
அவதியுண்டு ஆங்காங்கே
ஆன்றோர்கள் வாழ்வினிலே
அனுபவமும் சேர்ந்திருக்கும்

பிறைநுதலின் நெற்றியிலே
பொட்டிருக்கும்
பிற்போடும் கருமமும்
பின்னிற்கும் வாழ்வினிலே

திறனுடனே திறமையும்
தித்திப்பாய் சேர்ந்திருக்கும்
அறனதுவும் மறனதுவும்
அன்போடு கலந்திருக்கும்

வெற்றியுடன் தோல்வியும்
இணைந்திருக்கும்
வேறுபாடு தோன்றாத
வாழ்வினிலும் வளமிருக்கும்

வளமிருக்கும் வாழ்வினிலே
வசந்தம் உண்டு
வண்ணத் தமிழ் பாவினிலும்
சுகந்தம் உண்டு!

நகுலா சிவநாதன் 1678

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading