பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

நல்ல நட்பு

நகுலா சிவநாதன்

நல்ல நட்பு

நல்ல நட்பு நாளும் இனிது
வல்ல வாழ்வின் வசந்தம் அது
வெல்லும் உலகில் வேண்டும் நட்பு
வேராய் நீட்சி காண்பதும் நட்பு

அன்பு என்ற ஆணிவேர் நட்பு
அகிலம் காணும் பெருமையன்றோ!
துன்பம் வருகையில் துடிக்கும் அன்பு
இன்பத்திலும் கைகோர்க்கும் உண்மைநட்பு

உள்ளம் பரிமாறும் உண்மையன்பே
வெள்ளம்போல் பெருகும் வேதனை தீர்க்கும்
உப்பாய் இருக்கும் நட்பே
உலகிலே இன்பம் கொழிக்குமன்றோ!

நகுலா சிவநாதன்1816

Nada Mohan
Author: Nada Mohan