“நினைவுகள் கனக்கிறது”

நேவிஸ் பிலிப் கவி இல(529)

ஊரறியோம் பேரறியோம்
உறங்கி விட்ட கதையறிவோம்
சீரறிவோம் திறமறிவோம் -உங்கள்
தியாகத்தின் சிறப்பறிலோம்

புன்னை மரங்களிலே
உரிமைப் பூக்கள் சிரிக்கவில்லை
அன்னை மனதினிலே அடிமை
அனல் தணியவில்லை

பூமியை நினைத்தீர்அ
அமைதியை. இழந்தீர்
கடமையில் உயர்ந்தீர்
கண்துயில் மறந்தீர்

ஆயுதம் தரித்தீர்
சுமையினை அனைவரும்
சகமாய் பிரித்தீர்
களத்தினில் போராடி
உம்முயிர் ஈந்தீர்

தியாக தீபங்களை எம்
நெஞ்சிலே தாங்கி
கார்த்திகை மலர்களை
கரத்திலே ஏந்தி
கனத்த நினைவுகளில்
வழிநீர் கசிய அஞ்சலித்தோம்
சிரம் தாழ்த்தி. நன்றி,,,,,,’!,

Author:

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading