கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(76). 05/10/22
என் வகுப்பறையின் ஆளுமைகள்

அறியா வயதினிலே
வெண்மணல் பரப்பினிலே
விரல் பிடித்து எழுதுவித்து என்னை
வளர்வித்தோரின் ஆளுமைகள்

வகுப்பறைகளில் அமர வைத்து
உலகைக் காட்டியவர்கள்
உயர்ந்து நான் முன்னேற
கற்பித்து எனக்கு உரம் ஊட்டியவர்கள்

நலமான உளப் பாங்கும்
நேர்மையான எதிர் நோக்கும்
மனிதப் பண்பும் ஆன்மீக விழுமியமும் ஊட்டி
என்னை சீராக வளர்த்தவர்கள்

ஒழுங்கமைந்த இயல்புகள்
உணர்வுகள் சிந்தனைகள்
இலக்கியமும் தேன்தமிழும்
கல்வியறிவினிலே நான் பெற்ற மதிப் பெண்களும்

உங்களை நான் என்றும் மறந்தேனில்லை
உம் ஆளுமைகள் எம்மை விட்டு நீங்கவில்லை
உங்களிடம் பயின்ற நற் பண்புகளை
மறவாதென்றும் வாழ்வதே
நான் அளிக்கும் நன்றிக்காணிக்கை
உங்களுக்கு

Nada Mohan
Author: Nada Mohan