மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன்
பதியமிடும் எழுத்தாணிகள்

எழுத்தாலே பதியமிட்டு
எண்ணத்தால் கோலமிட்டு
எழுகின்ற வாழ்க்கை
எழில்மயமாய் அமைந்திடும்

எழுத்தாளர்வாரம்
எடுக்கின்ற பதியம்
தொடுக்கின்ற மாலைகளால்
தொடரட்டும் என்றும்

விரிந்திட்ட நல்லெண்ணம்
விளக்காக பாமுகத்தில்
விண்ணதிர ஒளிர
மண்மீது எழுத்தாணி
பதியட்டும் புடமாக

29 வருட எழுத்தாணிகள்
இங்கிதமாய் ஓளிரட்டும்
இதமான எண்ணமுடன்
இனிமைகள் தொடரட்டும்

நகுலா சிவநாதன் 1858

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading