ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

பாசப் பகிர்வினிலே…

வசந்தா ஜெகதீசன்
தாயென்னும் தைரியத்தில்
தற்காத்த பொக்கிஷத்தில்
உறவான தொப்புள்கொடி
உதிரத்தின் தொடர்புவழி
அகிலத்தில் எமையீன்று
அரவணைத்துக் காத்த தாய்
உதிரத்தை பாலாக்கி
உயிர் மெய்யாய் உணர்வூட்டி
உளமெல்லாம் எமக்காக்கி
உயர்விற்கு வழிகாட்டி
கல்விக்கு அகரமிட்டு
கண்காணித்து வளர்த்ததாயே
கைமாறு கருதாத கருணையின் பேரன்பே
பாசத்தின் பகிர்வினில் பாரபட்சமற்ற தாயே
நேசத்தின் நிறைமதி- நீங்கள்
நேர்மைக்கு நீதிபதி!
அன்பிற்கு அட்சயம்
அம்மா என்னும் பொக்கிசம்
இதயத்தின் தாரகை
வரமெனப் பெற்றதாய்
வாழ்வெல்லாம் போற்றுவேன்.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading