கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

பாலதேவகஜன்

நிர்மூலம்

கருவாய் காத்த
காலாச்சாரம் இங்கே
கருகியே போகும்
கதிதான் எங்கும்.

காத்து நின்றவர்
கரங்களும் ஓய்ந்திட
காத்து இருந்தவன்
காட்டுறான் தன் வேலையை.

பருவங்கள் தாட்டியே
பாதைகள் நீளுதே
பாதகம் எங்குமே
படர்துதான் போகுதே.

ஆவாவும் மாவாவும்
ஆங்காங்கே முளைக்குதே
கஞ்சாவும் ஐஸ்சும்
கடல்கடந்து வருகுதே.

வெளிநாட்டு பணங்களால்
பிணவாடை வீசுதே
வெறித்தனங்கள் வீதிகளில்
விசித்திரம் காட்டுதே.

அடக்கமும் அமைதியும்
அழிந்துதான் போகுதே
அரைகுறை ஆடையும்
அகன்றதாய் தேணுதே.

எதிலும் நிமிர்வோடு
என்றே தானிருந்தோம்
அத்தனையும் நிர்மூலம்
ஆனதுவே நம் சோகம்.

Nada Mohan
Author: Nada Mohan