பேரிடரின் மறுபெயர் டித்வா

பாஸ்கரன்.க

பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின் கோரம்
கொத்தாய் மாந்தர் மடிந்த அவலக் கோலம்
குளங்கள் உடைந்தன, குன்றுகள் சரிந்தன, வீதிகள் சிதைந்தன…
வீடுகள் மூழ்கின
உயிர்கள் உதிர்ந்தன.
உறவுகள் தொலைந்தன..
நதிகள் பாய்ந்தன…
கரைகள் கரைந்தன….
ஊழித் தாண்டவம் ஆடிய புயலால் உயிர்கள் மடிந்தன
ஆழிகள் கூட கரைகள் கடந்து ஊருள் புகுந்தன
வாழிடம் தன்னை வெள்ளம் மூடி அள்ளிச் சென்றது
அழிவுகள் தந்த அவலம் எங்கள் ஊரைத் தின்றது.

ஆனாலும்….
நாங்கள் மீண்டும் எழுவோம்
ஒன்றாய் மீண்டு எழுவோம்

Author:

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading