பொன்.தர்மா

வணக்கம்
இது வியாழன் கவிதை நேரம்.
**** பூக்கட்டும் புன்னகை****

கொட்டிடும் முரசு , வெகுவாகக் கொட்டிடட்டும்.
சுற்றிய சஞ்சலங்கள், சுக்குநூறாய்ச் சிதறட்டும்.

வெற்றிகள் குவிந்துமே, வெற்றிக் கொடி ஏற்றட்டும்.
பற்றிய கொடிகளுமே,பலநூறாய்க் காய்க்கட்டும்.
பூக்கட்டும் புன்னகை
மறைத்திடும் இருளது,மெள்ளெனவே விலகட்டும்.
மண்ணினுள் புதைந்தவை,முளைகொண்டு நிமிரட்டும்.

மக்கிய உரங்களெல்லாம்,மண்ணோடு சேரட்டும் .
மொட்டுக்கள்,மலர்களுமாய், பூத்துமே குலுங்கட்டும்.

ஏறிய விலை வாசிகளோ, இறங்கியே சரியட்டும்.
எட்டுக் குப் பத்தாக,மக்களுமோ,அள்ளியே குவிக்கட்டும்.

மூடிய முகக் கவசம்,முற்றாகக் கலையட்டும்.
வாடிய முகங்களிலே,பூக்கட்டும் புன்னகைகள்.
பூக்கட்டும் புன்னகைகள்,பொங்கட்டும் , மகிழ்ச்சி இன்பம்.
பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading