மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 211
21/02/2023 செவ்வாய்
“சாதனை”
…………….
செய்யும் தொழில் சிறப்பானால்
சேர்வது என்றும் சாதனையே!
மெய்யும் மனமும் ஒன்றானால்
மேன்மை தருவது சாதனையே!

உண்மையும் உழைப்பும் உறவாடின்
உயர்வாய் கிடைப்பது சாதனையே!
கண்ணெனக் கடமை செய்திட்டால்
கனிவாய் கிடைத்திடும் சாதனையே!

வேதனை மறந்து வேலை செய்யின்
வெகுமதி யாவதும் சாதனையே!
சோதனை வருகினும் சோராது
செயற்படு-வந்திடும் சாதனையே!

உள்ளத்தில் கள்ளம் அகன்றிட்டால்
உயர்வாய் கிடைத்திடும் சாதனையே!
பள்ளத்தில் வீழ்ந்து எழுந்தோர்க்கும்
பரிசாய் கிடைப்பதும் சாதனையே!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading