11
Jun
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை...
11
Jun
குருவி
இல 88
= குருவி
காலை விடியலில் கீச்சிடும் குருவி
சின்ன...
11
Jun
வாழ்த்து பகிர்வு
தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 275
06/08/2024 செவ்வாய்
“ஒரு பெண்!”
——————
எழுனூற்றித் தொண்ணீற் றைந்து
இலக்கம் கொண்ட பேருந்து
எழுந்து வரும்கீரி மலைவிட்டு
ரவிக்கையிலா அவளைச் சுமந்து!
குறுக்குக் கட்டு சேலையுடனே
குண்டாய் உருண்ட உடலுடனே
கறுப்பு நிறத்திற் கிலக்கணமாய்..
கழுத்தில் நகை அணிகலனாய்!
மிதிபலகை தனிலே பிரயாணம்!
மிரட்டும் வகை சொற்பிரயோகம்!
கதிகலங்கும் நடத்துனர் மனம்!
கட்டுப்பா டிருக்கா தவர்வசம்!
அம்மணியின் குரல்தான் கேட்கும்
அதைவிடில் அமைதியே நிலவும்
கும்மாளம் சுன்னாகத்தில் ஓயும்
குடும்பஸ்தர் மூச்சும் பின்மீளும்!
தனக்கொரு பெயரை எடுத்தவள்
தரணியை மிரட்டிய பெண்ணவள்
நினைப்பில் ஒருகணம் வந்ததால்
நிறைந்தாள் கவிதைப் பரப்பதில்!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
12
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
"சுமை"
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!
தந்தைக்கு குடும்ப...
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...