கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 194
04/10/2022 செவ்வாய்
“கலை வாணி”
——————
தாமரை மலரில் இருப்பாயே
தாரணி எங்கும் நிறைவாயே
நாவதன் மீதும் உறைவாயே
நாமகள் எனும் பெரும் தாயே

நான்முகன் நாயகி நீயே
நானிலம் ஏற்றிடும் தாயே
வானிலும் உயரிய பூவே
வளர் எழில் பூங்காவே!

ஏட்டிலும் எழுத்திலும் நீயே
எல்லோர் மனதிலும் நீயே
காட்டிடும் அன்பிலும் நீயே
காந்தர்வ அழகியும் நீயே!

முப்போதும் உடை வெண்பருத்தி
மூன்று தேவிகளில் நீ ஒருத்தி
எப்போதும் உனை மனத்திருத்தி
ஏற்பதில் எமக்கோர் மனத்திருப்தி!

உனக்கு மறுபெயர் வாணி
உலகில் நீதான் ராணி
எந்தன் மனதுறை வேணி
ஏந்தினேன் உன்பதம் பேணி!

நன்றி
மதிமகன

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading