மனோகரி ஜெகதீஸ்வரன்

மாவீரரே

பானுக்கும் பருப்புக்குமே
படையெடுத்தோம் நாம்
கூனிக்குறுகலுக்கு விடைகொடுக்கக் களம்புகுந்தவர் நீவிர்
அதனால் மனம்புகுந்தீர்
மாவீரராய்ச் சிறந்தீர்

பகடுகளை அறுத்தீர்
பருவக்கனவைச் சிதைத்தீர்
உறவுகளை வெறுத்தீர்
உரிமையையே நினைத்தீர்
புறத்தை மறந்தீர்
புடைத்தெழு தோளில்
ஆயுதங்கள் சுமந்தீர்

அச்சத்தைத் துறந்தே
களத்தில் சுழன்றீர்
எஞ்சியவரும் விழித்தெழ
எத்தனங்கள் முளைத்திட
எச்சமமென ஏந்திட
உயிர்கழற்றி விழ்ந்தீர்

எழுகின்ற சுடர்கள்
ஏந்துதே உம்நினைவை
அழுகின்ற கண்ணீரும்
அறைகின்றதே துயரை
தழுவுகின்ற கரங்கள்
வேண்டுதே இறையை

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading