சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

நிலா

வானக் கூரைக்குள் உலவும்
வட்ட வெளிச்சப் பந்தே
கானக் குயிலும் குரலால்
காவுதே உந்தன் அழகை

கண்களால் உன்னைக் கைதுசெய்தே
கட்டுவர் பாக்களைப் பாவலர்
பெண்ணின் முகத்துக்கும் காட்டுவர் உன்னை மகிழ்ந்திட உவமை

காதலர் மனமும் தேடும்
களவுக்காய் உந்தன் உறவை
மோகத்துள் அடிக்கடி மறைந்தும் போவாய் தூது

தாயும் தேடுவாள் மழலைக்காய்
மறைந்தும் தொலைவாய் சிலநாள்
நோயும் வருமோ உனக்கு
நெஞ்சில் உள்ளதை நீயும்கூறு

பாட்டியும் சுடுவாளம் வடையுங்கு
பகிர்ந்துண்ணத் தருவாயோ எமக்கு
ஏட்டிக்குப் போட்டி யிங்கு
எந்நாளும் இங்குண்டு

நிலமும் உண்டே
உன்னிடம்
நீயதைத் தருவாயோ எம்மிடம்
அப்போதே
உலவ வருவேன் உன்னிடம்
சுதந்திரச் சிறகு பூட்டி

மனோகரி jegathesvaran

ஊருக்காய் உலவும் நிலவே

Nada Mohan
Author: Nada Mohan