மனோகரி ஜெகதீஸ்வரன்

பெற்றோரே

தாய்மைப் பூப்பாலே
தம்மை நிறைந்தவர்
தாங்கிய வேடத்தால்
தரணியில் நிலைப்பவர்
சேயது முளைத்திட
சேர்ந்தே விதைப்பவர்
செய்தி தரும்பழியை
செய்கையாலே உடைப்பவர்

ஆளுமை மகவை
ஆக்க உழைப்பவர்
அந்தரங்க சுகங்களை
அதற்காய் துறப்பவர்
தாழாத் தலைகளையும்
தாமாய் தாழ்த்துவர்
தடை இடித்து
தம்கடன் முடிக்க

முகவழிச் சான்று முகத்திலே உண்டு
முகவரி காட்டுமது
முகத்திலே நின்று
அகவலி போக்கிட
அனைத்தையும் செய்திடு
அன்னை தந்தைக்கு
அருமை மகவாய்

நாட்களை எமக்காய்
நகர்த்திய பெற்றோர்
நடுத்தெரு நின்று
நாணலாமோ சொல்லு

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan