ஏரிக்கரைப் பூங்காற்றே

சிவரூபன் சர்வேஸ்வரி ஏரிக்கரைப் பூங்காற்றே ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே பொங்கும் கடலின்...

Continue reading

” மாதரின் மறுபக்கம் “

ரஜனி அன்ரன் (B. A) …” மாதரின் மறுபக்கம் ” 12.03.2026

மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை மிக்கது மாதர்மாண்பு
அன்பு பொறுமை அடக்கம் நேர்மை
அத்தனையும் மாதர்மாண்பே
மனுக்குலத்திற்கு பலபக்கங்கள்போல்
மாதருக்கும் மறுபக்கமென ஒன்றுஉண்டே !

அன்புகாட்டினால் அவளொரு நூலகம்
அவளை அடக்கிப் பார்த்தால் போர்க்களம்
மென்மையென்பது அவள் குணமல்ல
மேதினி கொடுத்த முகமூடி
சரியென்று தலையாட்டும் மெளனத்தின் பின்னே
முடியாதென்று முழங்கும் எரிமலையும்அவளே !

பூவிலும்மெல்லிய பூவையவள்
பொறிதட்டினால் குமுறிடுவாள் பேரலையாய்
சமூகத்தின் பார்வையில் அவள்மெல்லினம்
சவால்களின் மத்தியில் அவளோவல்லினம்
தியாகத்தில் தனையுருக்கும் மெழுகுவர்த்தியல்ல
இருளைவிரட்ட தன்னையேஎரிக்கும் சக்தியும்அவளே
மொத்தத்தில் மாதர்இதயம் ஒருமறைக்கப்பட்ட காவியமே !

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading