ஏரிக்கரைப் பூங்காற்றே

சிவரூபன் சர்வேஸ்வரி
ஏரிக்கரைப் பூங்காற்றே

ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே
ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே
பொங்கும் கடலின் திரையும் அழகே
துள்ளியே பாயும் மீன்களின் உற்சாகம்

அள்ளியே எடுக்க ஆவலும் தூண்டுதே
கைநழுவும் போதில் காதலும் கூடியது

பூமியின் விரிவாக்கம் பூக்கும் மிகையாய்
அன்னையின் மடியிலே தவழும் நினைவுகளே
காட்சியும் காணமுமாய் காற்றின் ரீங்காரம்
அசத்தலான பயணம் ஆசையில் மிதக்குதே

சிவரூபன் சர்வேஸ்வரி

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading