சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026

தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.

சமையலறையே கதியற்று
சாதிக்கும் மாதரே
சரித்திரம் படைக்கும்
சாமர்த்தியமும் இவளே.

கடலளவு துயரை
கையினுள் போட்டு
புன்னகையே உலகிற்கு
புலர்பிக்கும் பெண்ணியம்.

பொறுமையின் சிகரமாய்
பூமியை ஆழ்கிறாள்
பூமாதேவியும் பூரிக்கிறாள்
மாதரின் மறுபக்கம் கண்டு .

Jeba Sri
Author: Jeba Sri

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading