சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

“மாற்றத்தின் ஒளியினிலே”

நேவிஸ் பிலிப் கவிஇல(450)

புதுஉலகே புத்துயிரே புதிதாய் வா
புவியினை சலவை செய்திட விரைந்து வா
வாசமிகு மலராய் அன்பைப் பரப்ப வா
வளமான வாழ்வை வழங்க எமக்கருள வா

நற் பண்பால் வாழ்வுக்கு உயிரூட்டி
நல் எண்ணத்தை உள்ளத்தில் பயிராக்கி
நல்லது நினைத்து நம்பிக்கை வளர்க்க
முயற்சிகள் அனைத்தையும் முளைக்க விடு

தீயினில் சுடர் விடும் பொன்னாக
செதுக்கிட உயிர் பெறும் கற்சிலையாக
வெற்றிகள் முழு மதியாய் ஒளிர
தோல்விகள் தேய் பிறையாய் மறைய

உலகினில் வாழும் உயிரினம்
உன்னத அன்பினில் ஓங்கிட
நிம்மதி எங்கும் நிலவிட
வாழும் வாழ்வு எமதாக

வாழ்க்கையின் மகத்துவம்
உணர்த்திட மாற்றத்தின் ஒளியாய்
விரைந்து வா
நன்றி

Author: