மாற்றம் ஒன்றே..

வியாழன் கவி 2117
சிவதர்சனி 6/3/2025
மாற்றம் ஒன்றே ..

மனமே தினமும் மாற்றம்
ஒன்றே காண் யாதென
கணமும் அதன் வேகம்
அறிவாய் தீயில் அதீதமாய்..

விஞ்ஞானம் விஞ்சிடும்
அதில் அறிவாய் நிதம்
வினையாகும் செயல்
புரிவாய் சிலையென ஆவாய்..

பாமுகப் பக்கம் விழி காண்
அற்புதம் அதன் வடிவம்
சொற்பமே நம் வாழ்வாம்
சொரியும் அழகு விம்பம்…

முயல்கிற மனங்களில்
முனைப்புகள் தினம் தினம்
விரல்களில் விளையாடு
உரமொடு எடுத்தாளுவாய்..

தனித்தனிப் பகுதியாய்
கனிவது கணினி உருவாக்கம்
படைப்போர் திறனைப்
பாருக்கே அருளுதல் நிகழ்வாய்..

ஆலமர வித்தாய் இவை
அழகுற ஊன்றியவர் திறமை
அழகிய வடிவமைப்பு தரும்
மாற்றம் ஒன்றே மாற்றமாகும்..

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

Continue reading