மாற்றம்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து மாற்றம்

05.09.24
மாற்றம்
ஆக்கம் 328

மாற்றம் வேண்டும்
என்று சீற்றம் காணும்
மனம் நினைக்குது
ஏற்றம் கண்ட காலநிலை கொதித்துச்
சீறிக் கனக்குது

புயலோடு , மண் சரிவு பெருவெள்ளம் பூகம்பம்
கடும் வெப்ப அழிவில்
இறப்பு போராடுது

புதுப் புது நோய் தொற்ற தடுப்பூசி
தொடுத்த வேறு
நோயால் அல்லலுற
மாந்தர் நிலை கூறாகுது

சில நாடுகள் தேர்தல்
தில்லுமுல்லு சீர் கெட்டு
மது போதை உரமாக
மாற்றம் காணாது
மாண்டு போகுது

வல்லரசு நாடுகளோ
ஆயுத விற்பனையில்
சாதனை புடைத்த
போர் விமானக் குண்டு
வீச்சில் துவண்ட
துன்பமோ தூக்கில்
தொங்குது

மாந்தர் மன அழுத்தம்
மன அமைதியின்றிப்
பிறக்கும் குழந்தைகள்
உடல் உறுப்பில் செயல்
இழந்து போராட
வரண்ட வாழ்வில்
திரண்ட மாற்றம் மாற
வேண்டுமே .

Nada Mohan
Author: Nada Mohan