அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ உழைப்பின் உன்னதர்கள் “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 05.05.2022

உலகையே தோள்களில் சுமந்து
உழைப்பினை உரமாக்கி
உண்ண உடுக்க உறங்க
உன்னதமாய் நாம் வாழ
ஆலைகளில் தொழிற்சாலைகளில்
வீதிச்சாலைகளில் சாக்கடைகளில் ஆழக்கடலில்
சேற்று வயல்களில் சுரங்கங்களிலென
உழைக்கும் உழைப்பாளிகள் என்றும் உன்னதர்களே !

உழைக்கும் உன்னதர்களை
மேன்மைப்படுத்தும் மே மாதமே
மேதினியில் பூத்து மேன்மை பெறுகிறாய் நீயும்
இரும்பாக தமை வருத்தி
கரும்பாக நாம்வாழ
உரமோடு உழைக்கும் உழைப்பாளிகளே
உலகினைத் தாங்கும் உன்னதர்கள் !

உழைப்பாளிகளின் கடின உழைப்பில்
உருவானதே இவ்வுலக அதிசயங்கள்
உலகம் இயங்க உயிர்கள் வாழ
உன்னத உழைப்பாளிகளின் உழைப்பு அவசியமே
வியர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும்
கடின உழைப்பினால் உலகை ஆழட்டும் !

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading