10
Sep
இரா.விஜயகௌரி
ஓடி ஓடி உழைத்த கால்கள்
உருக்குலைந்து போன தேகம்
பார்வை மங்கிய ஒளியிழந்த விழிகள்
சுருக்கம் போர்த்திய...
10
Sep
கன்றுக்குட்டி
இல 95
கன்றுக்குட்டி
துள்ளிக் குதிக்கும் கால்கள்
மழலை பேசும் கண்கள்...
10
Sep
எதுவும் உனக்கு இல்லை
கவிதை 816
என்னுடையது என்னுடையது என்று சொன்னாயே
பிறக்கும்போதும் கொண்டுவரவில்லை
இறக்கும் போதும் கொண்டுசெல்வதுமில்லை...
ரஜனி அன்ரன்
“ தந்தையெனும் விந்தை “ கவி……ரஜனி அன்ரன்….(B.A) 26.05.2022
தந்தையர் நாடாம் ஜேர்மனியில்
தந்தையர் தினமாம்
ஆயிரம் கனவுகளை ஆழ்மனதில் சுமந்து
அன்பினை மனதில் பூட்டி
தூரமாய் நின்று ரசித்திடும்
பாசக்காரத் தந்தையை தந்தையெனும் விந்தையை
நேசத்தோடு நினைத்திடுவோம் !
முதலெழுத்தின் முகவரியாகி
மெழுகாய் உருகி முழுதாய் சுமந்து
சக்கரமாய் சுழன்று எமக்காய் வாழ்ந்த
தந்தையெனும் விந்தையை
தன்னலமில்லாத் தியாகியை
உழைப்பின் உன்னதரை
உவகையோடு நினைத்திடுவோம் !
கண்டிப்பை எமக்குக் காட்டி
கருணையைப் பூட்டி வைத்து
கஸ்டத்தை மனதில் புதைத்து
கடினமாய் உழைத்த ஜீவனை
அதிசயமான புத்தகத்தை
ஆற்றலின் வல்லாளனை
ஆழமாய் நேசிப்போம் என்றும் !
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...