ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

25.04.23
ஆக்கம் -99
ஆற்றல்

ஆற்றல் அனைத்திலும் அறிவானவர்
போற்றுதலுக்குரியவரே

கற்றல் எதிலும் செறிவானவர்
முற்று முழுதாக கூனிக்குறுகாது
பேறு பெற்றவரே

முயற்சி என்றும் மூலதனமாக
வளர்ச்சி எதிலும் விளைச்சலாக
அறுவடையானவர் முன்னிற்பவரே

சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல்
கூற்றில் உலர்ந்த கனிவாற்றல்
கிடைத்தால் இனிதானவரே

முற்றிலும் ஆற்றல் பெறுபவரோ
சற்று நீண்ட பயணத்துக்குரியவரே

சுற்றிச் சுழலும் பூமிப் பந்தில்
பற்றிப் பிடிப்பவரே
அறிவு தரும் ஆற்றலுடன் இணைந்தால்
வெற்றிக் கொடி ஏற்றுபவரே .

Nada Mohan
Author: Nada Mohan