கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

07.06.22
ஆக்கம்-61
பழமை
இனிமையிலும் இனிமையானது பழமை
இளமையில் கற்றதை முதுமையானது
அனுபவமாக்கும் வழமை

வறுமையிலும் கொடியது தனிமை
இதனால் தாத்தா,பாட்டி,பிள்ளைகளுடன்
கூட்டுக்குடும்பம் சேர்ந்திருக்கும் உரிமை

பொறுமையிலும் நறுமணமானது கடமை
சிறார் செய்யும் குறும்புகள் இரசித்து
அன்புடன் ஆறுதலாய் அறிவுரைக் கதை
சொல்லி அரவணைக்கும் புதுமை

செந்தமிழ்ச் சுவை கலந்தூட்டும்
சிந்தை இனித்திடும் செவிகளில்
தேன் பாய்ச்சும் பழமொழிகள்,
தத்துவப் பாடல் மனதில் இன்றும்
குளிர்மையாக்கும் பழமையே

Nada Mohan
Author: Nada Mohan