கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

28.06.22
ஆக்கம்-64
பிரிவுத் துயர்
உயிர் தந்து உணவூட்டி உரமூட்டிய துடிப்பு
அயராத உழைப்பு ஆனந்தமுடன் வளர்ப்பு
எதற்கும் இயலாது என்று எவர்க்கும்
சொல்லாததும் ,இல்லை என்ற சொல்லைப்
பாவியாததும் எல்லோர் மனதில் இடம்பிடிப்பு

இவர்களிற்குப் பிள்ளைகளான எம் பிறப்பு
அதிஷ்டத்தின் உச்சந் தொட்ட பூரிப்பு
கூட்டுக் குடும்பமாய் அளவளாவிய பிணைப்பு
அப்பா அம்மா இறப்பில் பிரிவுத்துயர்
பேரிழப்பில் முடங்கியது எம் இதயத் துடிப்பு

ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கின்றோம்

Nada Mohan
Author: Nada Mohan