வரமானதோ வயோதிபம்
வரமானதோ வயோதிபம் 53
வசந்தா ஜெகதீசன்
தடமது பதித்தெழும் தனித்துவமே…
அணியெனத் திரண்டெழு ஆளுமையில்
அனுதினம் படைப்புக்கள் வீரியமே
புதிதென உருவாக்கம் பூத்தெழுமே
இளையோர் திறனின் மேம்பாடும்
இன்றியமையாத் தேடல் வனப்புகளும்
சாலச் சிறந்த சான்றுகளும்
புலம்பெயர் உலகத்தமிழ்ச் சிறுவர்
எழுத்தாளர் வாரம் மகுடமிட
இருபத்தியேழாம் அகவையிலே
எத்தனை வளர்ச்சியின் சரிதமுண்டு
ஏற்றத்தின் திறவுகோல் பாமுகமாய்
எழுத்தே மொழியின் இன்னுயிர்ப்பாய்
உழுதிடும் ஏர்போல் நாற்றூன்றி
உருவாக்கத்தின் திறனை தினமாக்கி
விழுதிடும் சேவை ஆற்றுகின்ற
வேராய் நிமிர்ந்திட்ட கோபுரமே
பல்திறன் வித்தகம் பாதை செப்பும்
பாமுகப்பணியின் இலக்கோடு
எழுத்தும் படைப்பும் தனித்துவமே
தடைகளை உடைத்துயர் சரித்திரமே
இலண்டன் தமிழ் வானொலி சரிதமிது
குன்றில் விளக்கென குவலயத்தில்
என்றும் ஒளிர்வாய் பாமுகமாய்
உருவாக்கத் திறனின் ஒளிமுகமாய்.
நன்றி
மிக்க நன்றி
