புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

எச்சம்…
வரையறை அற்றது வாழ்வின் எச்சம்
வரைமுறை உடையது வாக்கிய எச்சம்
நடைமுறை வாழ்வில்
நாம் கண்ட எச்சம்
நாளாந்தப் போரின்
விழுமிய மிச்சம்
துடிக்கும் உயிர்களும்
துண்டித்த தலைகளும்
வீழ்ந்தே மடிந்திட்ட மனிதத்தின் வதைகள்
மலிந்தே போனதே மனிதத்தின் தகமை
இழந்தே போனோம்
எண்ணற்ற உயிர்கள்
ஈடிணையற்ற இழப்பின் வலிமை
ஏங்கிய தவித்திடும்
உறவுகள் நிலமை
எச்சமாய் மிஞ்சிய அவலத்தின் அனர்த்தம்
இடரென வாட்டுதே மன அழுத்தத்தின் உச்சம்
வெந்தே மடிந்திட்ட வீரரின் கனவு
எச்சத்தின் வாழ்வில் எழுகை பெறுமா
எதிர்காலத்தின் நிமிர்வில் தமிழாய் எழுமா.
நன்றி

மிக்க நன்றி பாவை அண்ணாவுக்கும்இணைத்தொகுப்பாளர் அரும்பணி ஆற்றலுக்கும்.. மிக்க மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading