திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

ஷர்ளா தரன்

அழியாத கோலங்கள்

அன்ணை மடியில் தவழ்ந்ததும்
அணைத்து அவள் ஊட்டியதும்
அப்பா அள்ளித் தழுவியதும்
ஆரவாரமாய் பள்ளி சென்றதும்
அயலவரோடு கூடி மகிழ்ந்ததும்
சொந்தங்கள் நிறைந்து இருந்த வீடும்
சொர்க்கம் போல் வாழ்ந்த வாழ்வும்
உயர் கல்வியும் ஊர் வம்பும்
உற்ற நண்பர்களோடு சேட்டையும்
அழியாத கோலமாய்
அகண்டு நிற்குது என் மனதில்

நெஞ்சினிக்க பேசிய வார்த்தை
நேசம் கொண்டு வாழும் வாழ்க்கை
கொஞ்சி உலாவிய வேளையில்
கெஞ்சி வரும் சின்னச் சண்டைகள்
மஞ்சி விரட்டுப்போல்-அவளை
மடக்கிப் பிடித்த நினைவுகள்
மனதில் நின்று
மங்கிடாது துளிரூட்டும்
மங்கை அவள் நினைவுகள்
அழியாத கோலமாய்
ஆண்டுகள் பல கடந்தாலும்
மெல்லினமாய் மனதுக்குள்

சோகங்கள் பல கண்டாலும்
பாகங்கள் பல வந்தாலும்
வண்ண மலராய் வாசம் தரும்
இந்த அழியாத கோலங்கள்

ஷர்ளா தரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading