மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

அலை

வஜிதா முஹம்மட்
சுவடுகள் இல்லா வட்டம்
சுவாசமெல்லின ஆட்டம்
கரைதொட்ட ஓட்டம்
கட்டிப்புரலும் நீர்ரோட்டம்
ஓவியம் தீட்டும் நீர்கூட்டம்
ஒழித்துவிளையாடும் அலையாட்டம்
புன்னகை ஒளிச்சத்தம் காட்டும்
புகுந்து நெளிந்து தாலாட்டும்
தோண்டாத குழியோடு வாழ்வு
தோழமையோடு தொட௫ம் சாய்வு
அகலமாய் விரிந்த ஓடை
அழகிய மீன்களின் கூடை
அள்ளியே எழுவாய் துள்ளி
ஆனந்தம் த௫ம் நீர்சுள்ளி
ஏந்தி நல் வரமே நிற்பாய்
ஏகஇறைபடைப்பாய் தைப்பாய்
ஜம்பூத அற்பத அழகு
ஐயம் த௫ம் சிலநேரம் ௨ம்
நிகழ்வு

Nada Mohan
Author: Nada Mohan